2016-05-27 16:14:00

பாகிஸ்தானில் அமைதியைக் கட்டியெழுப்ப பல்வேறு மதத்தவர்


மே,27,2016. பாகிஸ்தானில் காழ்ப்புணர்வு மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்து,  அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு, அந்நாட்டின் பல்வேறு மத ஆர்வலர்கள் உறுதியெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில், எல்லா மதத்தவரையும் மதிப்பதை ஊக்குவித்து அமைதியைக் கட்டியெழுப்புவதற்கென ஆரம்பிக்கப்பட்ட, சகிப்புத்தன்மைக்கான பல்சமய இயக்கத்தினர்(Rwadari Tehreek), அதன் முதலாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக இவ்வியாழனன்று லாகூரில் நடத்திய கருத்தரங்கில், இவ்வாறு உறுதியெடுத்தனர்.  

சிறுபான்மையினர், பெண்கள், சிறார் எதிர்கொள்ளும் இன்னல்கள், பாதுகாப்புக் குறைவு, பயங்கரவாதம், நம்பிக்கையின்மை மற்றும் சகிப்பற்றதன்மையின் மூலக்காணங்கள் போன்றவை, இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

தேசிய பாதுகாப்புத் திட்டம், வெறுப்பூட்டும் பேச்சுக்களைத் தடை செய்தல், பாட நூல்களில் இனவெறியைத் தூண்டும் கூற்றுக்களைத் தடைசெய்தல் போன்றவைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன 

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.