2016-05-26 15:51:00

கடும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் நச்சுத்தன்மை


மே,26,2016. கடும் காலநிலை மாற்றங்கள், பயிர்களை நச்சுத்தன்மை உடையதாக மாற்றி வருகிறது எனவும், 450 கோடி மக்கள் இந்த நச்சுத்தன்மை ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

கடும் காலநிலை மாற்றங்களால் பல பயிர்கள் மற்றும் விலங்குகள், மனிதர்களுக்கு நச்சுத்தன்மை கொண்டாதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

வறட்சி மற்றும் அதிகப்படியான வெப்பநிலை, வேதியக் கலவைகளின் குவிப்புக்கு வழிவகை செய்கிறது என வெளிப்படுத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு புதிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது.

அதிகப்படியான மழையால் தாவரங்களில் ஹைட்ரோஜன் சயனைட் உயரும் நிலையும் ஏற்படலாம்.

இது குறித்து ஐ.நா மேலும் தெரிவிக்கையில், உலகளவில் 70 விழுக்காட்டு வேளாண் உற்பத்தி, பாதிப்பிற்கு உள்ளாவதோடு, 450 கோடி மக்கள் இந்த நச்சுத்தன்மை ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.