2016-05-26 15:44:00

அருள்சகோதரி Hermaneldeவுக்கு, ஜெர்மனியின் முக்கிய விருது


மே,26,2016. இந்தியாவில் ஏழைகளின் நலன் உயர, கடந்த ஐம்பது ஆண்டுகளாக உழைத்துவரும் அருள்சகோதரி Hermanelde Pulm அவர்களுக்கு, ஜெர்மன் அரசு The Cross of Merit என்ற விருதை வழங்கி பாராட்டியுள்ளது.

ஜெர்மன் அரசுத்தலைவர் Joachim Gauck அவர்களின் பிரதிநிதியாக, மும்பை ஜெர்மன் துணைத் தூதரகத்தில், அதன் தலைவர் Michael Siebert அவர்கள், இவ்விருதை அருள்சகோதரி Hermanelde அவர்களுக்கு, கடந்த திங்களன்று வழங்கினார்.

மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள அந்தேரி தூய ஆவி மருத்துவமனையில், 1963ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார் ஜெர்மன் நாட்டு அருள்சகோதரி Hermanelde.

79 வயது நிரம்பிய அருள்சகோதரி Hermanelde அவர்கள், தூய ஆவியாரின் மறைபோதக சகோதரிகள் சபையைச் சேர்ந்தவர்.

ஜெர்மன் குடியரசின் மிக முக்கியமான இந்த "The Cross of Merit (Bundesverdienstkreuz)" விருது, நாட்டின் நலனுக்காக உழைக்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில், இவ்விருது, நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பேரரசர்கள் மற்றும் அரசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.