2016-05-21 13:36:00

இது இரக்கத்தின் காலம் - நாம் எவ்வளவு சிறியவர்கள் என்ற தெளிவு


அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Franklin Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும், ஒருநாள், வெள்ளை மாளிகையில் சந்தித்து, நாள் முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு, அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்களின் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்" என்று சொன்னார்.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில், பழைய, புதிய தலைவர்கள் பொறுப்பேற்க உள்ளனர். தாங்கள் கடவுள் அல்ல என்ற தெளிவான உணர்வுடன், இவர்கள் அனைவரும், மக்கள் நலனில் அக்கறை காட்டும் தொண்டர்களாக செயல்பட, இரக்கத்தின் காலம் இவர்களை வழிநடத்தட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.