2016-05-20 15:41:00

எகிப்து விமான விபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


மே,20,2016. எகிப்திய பயணியர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை, எகிப்து அரசுதத்லைவர் Abdel Fattah Al Sisi அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்துன்பம் நிறைந்த நேரத்தில், இவ்விபத்தில் பலியான பல்வேறு நாட்டினருக்கு, எல்லாம்வல்ல இறைவனின் இரக்கம் கிடைப்பதற்கும், மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவர்மீதும், வல்லமையும் அமைதியும் நிறைந்த இறையாசீருக்கும் திருத்தந்தை செபிப்பதாகவும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இவ்வியாழனன்று, பாரிசில் இருந்து கெய்ரோ, நோக்கி 66 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர் குழுவுடன் சென்ற எகிப்து விமானம் MS804, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி, எகிப்து நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தபோது திடீரென ரேடார் கண்களில் இருந்து மறைந்தது. ஆனால், எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் பயணித்த 66 பேரும் பலியாகினர். இதன் பாகங்கள் அலெக்ஸ்சான்ட்ரியாவுக்கு 290 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து இராணுவம் தெரிவித்துள்ளது.

கிரேக்கம், எகிப்து, ப்ரெஞ்ச் மற்றும் பிரித்தானிய இராணுவப் பிரிவுகள், தேடல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.