2016-05-14 14:30:00

புத்த மத விழாவுக்கு கொரிய ஆயர்கள் வாழ்த்துச் செய்தி


மே,14,2016. மே 14, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட வேசாக் என்ற புத்த மத விழாவை முன்னிட்டு, அம்மதத்தினருக்கு தென் கொரிய ஆயர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.

அமைதியைக் கட்டியெழுப்புவதில், அன்பு மற்றும் இரக்க உணர்வின் வழியாக, கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுள்ளனர் ஆயர்கள்.

அமைதி, அன்பு, இரக்கம்.. இவைகளையே இவ்விரு மதத்தினரும் தேடுகின்றனர் என்றும், உண்மையான அமைதி ஏற்படுவதற்கு, அன்பு மற்றும் இரக்கம் வழியாக இவ்விரு மதத்தினரும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் Kwangju பேராயர் Hyginus Kim Hee-joong.

ஜெயோலா தென் மாநிலத்திலுள்ள Songgwangsa பகோடாவிற்கு, இம்மாதம் 6ம் தேதி சென்று தனது வாழ்த்துச் செய்தியை அளித்தார் பேராயர் Kim. அதோடு, ஒரு பெரிய திருவிவிலியம் மற்றும் இறுதி இரவு உணவு ஓவியத்தையும், புத்தமதத் துறவி Jinhwa அவர்களிடம் அளித்தார் பேராயர் Kim

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.