2016-05-14 14:11:00

இரக்க உணர்வோடு அணுகுவது என்பது..


மே,14,2016. "இரக்க உணர்வோடு அணுகுவது என்பது, கடவுளின் குழந்தைகளுக்கு இடையே, நலமான, சுதந்திரமான மற்றும் உடன்பிறப்பு உணர்வு உருவாவதற்கு உதவுவதாகும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.

மேலும், தூய ஆவியார் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், புனித சந்தியாகு பேராலயம் திருப்பொழிவு செய்யப்பட்டதன் 200ம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, தனது பிரதிநிதியாக, மெக்சிகோ பேராயர் கர்கினால் Norberto Rivera Carrera அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 31ம் தேதி முதல், ஜூன் 5ம் தேதி வரை நடைபெறும் குவாத்தமாலா உயர்மறைமாவட்ட திருநற்கருணை மாநாட்டில் இந்நிகழ்வு சிறப்பிக்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.