2016-05-11 16:01:00

எஸ்டோனியாவில் கர்தினால் பரோலின் வழங்கிய மறையுரை


மே,11,2016. நம்பகத் தன்மையுடன் வாழ்வது, இறைவனின் வார்த்தைக்கு கருத்துடன் கவனமாகச் செவிமடுப்பது, மற்றும் செபிப்பது ஆகியவை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும், குறிப்பாக, ஒவ்வொரு அருள் பணியாளருக்கும் அவசியமான பண்புகள் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 10, 11 ஆகிய இரு நாட்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் எஸ்டோனியா நாட்டில் மேற்கொண்டுள்ள ஒரு பயணத்தில், இப்புதன் காலை, டார்ட்டு (Tartu) நகரின், அமல அன்னை மரியா ஆலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியின்போது இவ்வாறு மறையுரையாற்றினார்.

திருத்தூதரான பவுல், எபேசு நகரிலிருந்து விடைபெற்றுச் செல்லும் நிகழ்வையொட்டி அமைந்திருந்த திருத்தூதர் பணிகள் நூல் வாசகத்தையும், இறுதி இரவுணவின் வேளையில் இயேசு தன் சீடர்கள் சார்பில் எழுப்பிய செபத்தையும் மையப்படுத்தி, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையை வழங்கினார்.

இன்றைய உலகில் அருள் பணியாளர்களும், துறவியரும், கிறிஸ்தவ குழுமங்களும் சந்திக்கும் பல பிரச்சனைகள் நடுவே, இயேசு எழுப்பிய செபத்திலிருந்து நமக்குத் தேவையான உறுதியை நாம் பெற முடியும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.