2016-05-09 15:44:00

மறைசாட்சிகளின் பெயரால் இந்திய கத்தோலிக்க மருத்துவமனை


மே,09,2016. அருணாச்சலப் பிரதேசத்தில் 40 இலட்சம் மக்களுக்கு சேவை புரிவதற்கென கட்டப்பட்டுள்ள கத்தோலிக்க மருத்துவமனை, விரைவில் திறக்கப்பட்ட உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் கத்தோலிக்க மறைசாட்சிகளின் நினைவாக ' Kirck மற்றும் Bourry'   மருத்துவ மனை என பெயரிடப்பட்டுள்ள இது, கேரளாவைச் சேர்ந்த திரு இதய அருள்கன்னியர் சபையால் நிர்வகிக்கப்பட உள்ளது.

கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது, இன்னும், படுக்கைகளும் மருத்துவ உபகரணங்களுமே வாங்கப்பட வேண்டும் என உரைத்த Miao ஆயர் George Palliparambil, இவ்வாண்டு இறுதிக்குள் இந்த மருத்துவமனை, மக்கள் பயன்பாட்டிற்கென வந்துவிடும் என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் வழியாக திபெத்திற்குள் செல்ல முயன்ற இரு பிரெஞ்ச் அருள்பணியாளர்கள், Nicolas Michael Krickம் Augustine Etienne Bourryயும் 1854ம் ஆண்டு Somme எனுமிடத்தில் கொலைச்செய்யப்பட்டனர்,. அவர்களின் பெயரால் இம்மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.