2016-05-09 16:12:00

சீனாவின் மிக உயரமான கோவில் திறக்கப்பட்டுள்ளது


மே,09,2016. அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், சீனாவின் மிக உயரமான கத்தோலிக்க கோவில் ஒன்று புதிதாக அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆயர்களும் 50 அருள்பணியாளர்களும் கலந்துகொண்ட இந்த  கோவில் திருநிலைப்பட்டு விழாவில், ஏறத்தாழ 6000 கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர்.

படகு போன்ற வடிவமைப்புடன், 75 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த கத்தோலிக்க கோவிலே, சீனாவின் மிக உயரமுடைய கத்தோலிக்க கோவிலாக அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்திருக்கும் Suzhou பகுதியில் முதன்முதலில் 1616ம் ஆண்டு இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் Giulio Aleni நற்செய்தி அறிவித்தார். Kunshan நகரில் 1911,ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோவில், 1949ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கம்யூனிச அரசால் பறிமுதல் செய்யப்பட்டு, கல்விக்கூடமாக மாற்றப்பட்டது. 19992ம் ஆண்டு திருப்பி வழங்கப்பட்ட அந்த இடத்தில் பெரிய கோவில் ஒன்று கட்டுவதற்கான் முயற்சிகள் 2004ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது புதிய கோவில் திறக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.