2016-05-07 15:27:00

மதங்கள் ஒன்றையொன்று மதிப்பதே, உலக அமைதிக்கு அடித்தளம்


மே,07,2016. பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும், ஒன்றையொன்று மதிப்பதே, உலக அமைதிக்கு அடித்தளமாகவும், மனித சமுதாயமும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பல இலக்குகளை எட்டுவதற்கு முன்நிபந்தனையுமாகவும் உள்ளன என்று ஐ.நா. பொது அவையில் கூறப்பட்டது.

அமைதிக்காக மதங்கள் என்ற தலைப்பில், உயர்மட்ட அளவில் இவ்வெள்ளியன்று ஐ.நா.வில் இடம்பெற்ற பகிர்வில் தொடக்கவுரையாற்றிய, பொது அவைத் தலைவர் Mogens Lykketoft அவர்கள் இவ்வாறு கூறினார்.

2030ம் ஆண்டின் ஐ.நா. இலக்குகளை நிறைவேற்றுவதில் மதங்களின் பங்கு குறித்தும் பேசப்பட்ட இப்பகிர்வில், சமுதாயத்தின் நல்வாழ்வும், வளமையும், பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும், ஒன்றையொன்று மதித்து நல்லிணக்கத்துடன் வாழ்வதைச் சார்ந்துள்ளன என்றும் கூறப்பட்டது.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.