2016-05-05 15:44:00

"இரக்கத்தின் ஆடையை நெய்கிறோம்" - பிரெஞ்ச் ஆயர்கள் விண்ணப்பம்


மே,05,2016. சமுதாய வலைத்தளங்கள் வழியே இன்னும் உயர்ந்த தொடர்புகளையும், ஒருவர் ஒருவரை மதிக்கும் வழிகளையும் பிரெஞ்ச் மக்கள் உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று பிரெஞ்ச் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

சமுதாய ஊடகங்களின் 50வது உலக நாள்,  மே 8, வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படுவதையொட்டி, "இரக்கத்தின் ஆடையை நெய்கிறோம்" என்ற தலைப்பில், பிரெஞ்ச் ஆயர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

"கிறிஸ்தவ சமுதாய வலைத்தளங்கள் பின்பற்றவேண்டிய பத்துக் கட்டளைகள்" என்ற கருத்தில் ஆயர்கள் தங்கள் அறிக்கையை வடிவமைத்துள்ளனர்.

வேறுபாடுகளை மதித்தல், நல்ல செய்திகளைப் பகிர்தல், உலகத்தைக் குறித்து ஒரு நேர்மறையான கருத்தை உருவாக்குதல், நற்செதியின் மகிழ்வைப் பரப்புதல் ஆகியவை, ஆயர்கள் விடுத்துள்ள பத்துக் கட்டளைகளில் அடங்கும்.

நம் தொடர்பு முயற்சிகளும், இரக்கமும் சந்திக்கவேண்டும் என்று திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பினை இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பிரெஞ்ச் ஆயர்கள், ஊடகத் தொழில் நுட்பங்களை நம்புவதை விட, மனித இதயத்தை நம்புவதே கிறிஸ்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், தொடர்பு சாதங்களின் உதவியுடன், இரக்கத்தின் ஆடையை நெய்வதே அழகு என்று ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.