2016-05-03 16:06:00

உலக ஆஸ்துமா தினம் மே 03


மே,03,2016. ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், உலக ஆஸ்துமா தினம், ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆஸ்துமா என்பது, மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாசக்குழாயைப் பாதிக்கும் ஒரு ஒவ்வாமை நோயாகும். சுவாசக்குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும் போது விசில் போன்ற சத்தம் கேட்கிறது. நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. மூச்சிரைத்தல், இருமல், மார்புப் பகுதி இறுக்கமாதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை நோயின் பொதுவான அறிகுறிகள்.

செல்லப் பிராணிகளின் ரோமம், துாசி, துாசியிலுள்ள சிறு பூச்சி, கரப்பான் பூச்சியின் கழிவுகள், மரங்கள் மற்றும் பூக்களின் மகரந்தத் துாள், மேல் பூச்சுப் பொருட்கள், சிகரெட் புகை, காற்றில் உள்ள மாசு, குளிர்ந்த காற்று, வெப்பநிலை மாற்றம், வண்ணப்பூச்சு பொருள் மற்றும் சமைக்கும்போது வரும் புகை, வயிறு மற்றும் உணவுக்குழாய்ப் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவை, ஆஸ்துமாவின் பாதிப்புகளை அதிகமாக்கி மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

வேதியப் பொருட்கள், நோய்த் தொற்று, குடும்பப் பின்னணி மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதனால் ஆஸ்துமா வரும்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.