2016-05-03 14:35:00

இது இரக்கத்தின் காலம் : தலைகனம் தரும் தவிப்பு


பலநாளாக கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்த கேள்வியை, தீக்குச்சி, அன்று தீப்பெட்டியிடம் கேட்டது: 'நாம் இரண்டு பேரும் உரசுகிறோம். ஆனால், நான் மட்டும் பற்றி எரிகிறேனே, ஏன்?', என்று தீக்குச்சி கேட்டது.

'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று தீப்பெட்டி பதில் சொன்னது.

தலைகனம் மிகுந்தால், தணலாகித் தவிக்க வேண்டியிருக்கும். தணிந்தால், பணிந்தால், தவிப்பின்றி வாழமுடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.