2016-05-02 15:41:00

தெருவாழ் வறியோருடன் திருத்தந்தை யூபிலி


மே,02,2016. “வேலைவாய்ப்பின்மை என்பது, இளையோரிடையே பெரிய அளவில் காணப்படுவதாலும், வேலைக்கான மாண்பு குறித்தவைகளாலும், வேலை குறித்த பிரச்சனை உலகில் நிலவி வருகிறது” என, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே மாதம் முதல் தேதி, ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தொழிலாளர் தினத்தையொட்டி இத்திங்களன்று இச்செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், தற்போது திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிறைவுறுவதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பாக, அதாவது நவம்பர் 11 முதல் 13 வரை, தெருவில் வாழும் வறியோருடன் சிறப்பு யூபிலிக் கொண்டாட்டம் இடம்பெறும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, தெருவாழ் ஏழைகளை உரோம் நகரில் திருத்தந்தை சந்திப்பதுடன், நவம்பர் 13ம்தேதி அவர்களுக்கான திருப்பலியையும் நிறைவேற்றுவார். இந்த சிறப்பு யூபிலிக் கொண்டாட்டத்திற்கு 'சகோதரர்' என பெயரிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.