2016-04-27 16:35:00

El Niño காலநிலையால் ஆறு கோடிப் பேர் பாதிப்பு


ஏப்.27,2016. எல் நீனோ காலநிலையால் ஏற்படும், பஞ்சம், வெள்ளம் மற்றும் பிற கடுமையான மாற்றங்களால், உலகில் ஆறு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளவேளை, வருங்காலத்தில் மக்கள் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு, அவர்களைத் தயாரிக்குமாறு  அனைத்துலக சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. அதிகாரி ஒருவர்.

தங்களின் முழு வாழ்வுமே அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில் வாழும் மக்களுக்கு, உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்று, ஐ.நா. மனிதாபிமான விவகார மற்றும் அவசரகால நிவாரணப் பணியின் நேரடிப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓப்ரெய்ன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வருகிற மே 23,24 தேதிகளில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில், உலக மனிதாபிமான உச்சி மாநாடு நடைபெறவிருப்பதைக் குறிப்பிட்ட ஓப்ரெய்ன் அவர்கள், 1997, 1998ம் ஆண்டுகளில், எல் நீனோ காலநிலையால், ஏறக்குறைய 21 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் மற்றும் 3,600 கோடி டாலர் மதிப்புடைய உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.