2016-04-25 14:25:00

சிலுவைகள் அழிக்கப்படுவதை எதிர்த்து ஹாங்காங் கிறிஸ்தவர்கள்


ஏப்.25,2016. சீனாவில் சிலுவைகள் அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து சமயத் தலைவர்களும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென் தலைமையில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.

முன்னாள் பிரித்தானிய காலனியாகிய ஹாங்காங்கிலும், சமய சுதந்திரம் குறைந்து வருகின்றது என்றும், இந்நிலை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு, நாங்கள் பொதுவில் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும், ஓய்வு பெற்ற கர்தினால் ஜோசப் சென் அவர்கள் கூறினார்.

ஹாங்காங்கிலுள்ள சீன அலுவலகத்தின் முன்பாக, போராட்டம் நடத்தி, கிறிஸ்தவ மத அடையாளமான சிலுவைகள் அழிக்கப்படுவது நிறுத்தப்படுமாறு, சீன அரசுக்கு கோரிக்கைகளையும் இக்கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்தனர்.

2013ம் ஆண்டுக்குப் பின்னர், சீனாவின் Zhejiang மாநிலத்தில், சீன அதிகாரிகள், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட சிலுவைகளை அழித்துள்ளனர் மற்றும் அகற்றியுள்ளனர். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.