2016-04-22 16:08:00

மனித வர்த்தகத்திற்கெதிரான வாடகைக்கார்


ஏப்.22,2016. மனித வர்த்தகம் என்ற, மனித மற்றும் சமூகத் தீமை குறித்து, வாடகைக்கார் ஓட்டுனர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், தென்னாப்ரிக்க கத்தோலிக்கத் திருஅவை, மனித வர்த்தகத்திற்கெதிரான வாடகைக்கார் என்ற புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.

தென்னாப்ரிக்க துறவு நிறுவனங்களின் தலைவர்களின் ஒத்துழைப்போடு, அந்நாட்டு ஆயர் பேரவையின் மனித வர்த்தகத்திற்கெதிரான ஆணைக்குழு, இப்புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

CTIP என்ற இந்த ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி மெலானி ஒக்கானர் அவர்கள், தென்னாப்ரிக்காவில், மனித வர்த்தகம், குறிப்பாக, சிறார் வர்த்தகம் அதிகமாக இடம்பெறுகின்றது என்று கூறினார்.

தென்னாப்ரிக்காவில், மனித வர்த்தகம் உள்நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல, 14 வயதுக்கும், 23 வயதுக்கும் உட்பட்டர்களில் பலர், எல்லைகள் கடந்து, தனிநபர்கள் மற்றும் அமைப்புமுறையில் இயங்கும் வர்த்தகர்களால் கடத்தப்படுகின்றனர் என்று கூறினார் அருள்சகோதரி மெலானி.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.