2016-04-21 15:30:00

உரோம் யூத சமூகத்திற்கு திருத்தந்தை பாஸ்கா செய்தி


ஏப்.21,2016. பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாரித்துவரும் உரோம் யூத சமூகத்திற்கு, இவ்வியாழனன்று செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்தும், அடிமை வாழ்விலிருந்தும் மீட்டதை நினைவுகூரும் பாஸ்கா விழா, ஏப்ரல் 22, இவ்வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் ஆரம்பித்து, ஏப்ரல் 30, சனிக்கிழமையன்று நிறைவடைகிறது. 

இவ்விழாவை முன்னிட்டு, உரோம் யூதமத ரபி Riccardo Di Segni அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் ஏராளமான ஆசிர்வாதங்களுடன், யூத சமூகத்துடன் இருந்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்து, அமைதியை அருள்வாராக என்று வாழ்த்தியுள்ளார்.  

இச்செய்தியின் இறுதியில், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையும், யூத சமூகமும் நட்பில் வளர்வதற்கு கடவுள் உதவுவாராக  என்றும் கூறியுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றம், இன்றைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது, இதற்குத் தீர்வு காண்பதற்கு அனைவரின் ஒருமைப்பாட்டுணர்வு தேவைப்படுகின்றது என்பது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.