2016-04-21 16:22:00

ஈராக் கிறிஸ்தவ மாணவர்க்கு ஆதரவாக ப்ரெஞ்ச் ஆயர்கள்


ஏப்.21,2016. புலம்பெயர்ந்தவர் முகாம்களில் வாழும், ஈராக் நாட்டின் இளம் கிறிஸ்தவ மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில், ப்ரெஞ்ச் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் பிரதிநிதிகள் குழு ஒன்று ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது.

இம்மாதம் 17ம் தேதியன்று சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய இக்குழு, இவ்வியாழனன்று நிறைவு செய்துள்ளது.

2014ம் ஆண்டில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, ஈராக்கின் நினிவே பகுதியைத் தாக்குவதற்குத் தொடங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறிய ஒரு இலட்சத்து இருபதாயிரம் கிறிஸ்தவர்களில், இளம் கிறிஸ்தவ மாணவர்களும் உள்ளடங்குவர்.

எர்பில் நகருக்குச் சென்ற அரபு மொழி பேசும் இம்மாணவர்கள், குர்த் மொழி தெரியாததால் தங்களின் படிப்பைத் தொடர முடியாமல் இருந்தனர் என்றும், ப்ரெஞ்ச் ஆயர்களின் முயற்சியால் தற்போது ஏறக்குறைய நானூறு மாணவர்கள், கிர்குக் நகரில் பல்கலைக்கழகம் செல்கின்றனர் என்றும், CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது.   

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.