2016-04-16 16:12:00

கரைகளில் ஒதுங்கும் சிறாரின் உடல்களை இனிமேல் பார்க்கக்கூடாது


ஏப்.16,2016. உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர், கிரேக்கத் திருஅவையின் பகுதிக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. மனிதர், அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வேரோடு நகர்த்தப்படுவது, அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான அவமதிப்புகள் இவற்றிற்கு எதிராக இன்று, ஒன்றுசேர்ந்து எம் குரல்களை எழுப்புகிறோம். நாடுகளின் தலைவிதியை தங்கள் கரங்களில் வைத்திருப்பவர்கள், இம்மக்களின் தற்போதைய நிலையை மாற்றும்பொருட்டு, இம்மக்களுக்கென, இந்த லெஸ்போஸ் தீவிலிருந்து உலகளாவிய விழிப்புணர்வைத் தொடங்குகிறேன். இத்தகைய நிலைக்கு இம்மக்களை ஆளாக்கிய அரசியலுக்கு எதிராகக் கண்டனம் எழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி கண்டனம் எழுப்புவது முதல்முறை அல்ல இது. ஏஜியன் கடலில் இறந்த ஏராளமான புலம்பெயர்ந்த மக்களுக்கு, நானும் கிரேக்கத் திருஅவையும் அஞ்சலி செலுத்துகின்றோம். இம்மக்களுக்கு கிரேக்க நாடு ஏற்கனவே நிறைய உதவிகளை ஆற்றியுள்ளது, தொடர்ந்தும் ஆற்றும். ஏஜியன் நீரில் அடித்துவரப்பட்டு கடற்கரைகளில் ஒதுங்கும் சிறாரின் உடல்களை இனிமேலும் நாம் பார்க்கமாட்டோம் என நம்புகின்றேன். ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2ம் Hieronimus அவர்கள் தனது உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.