2016-04-12 16:12:00

இது இரக்கத்தின் காலம் : 'இரக்கம்' என்ற 'இரப்பர்'


ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க அருள் பணியாளரும், பேராசிரியருமான ஹென்றி நூவென் (Henri Nouwen) அவர்கள், 'Compassion', அதாவது, 'பரிவு' என்பதைக் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். தன் ஆய்வின் ஒரு பகுதியாக, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், ஹுபர்ட் ஹம்ஃப்ரி (Hubert Humphrey) அவர்களைச் சந்திக்கச் சென்றார். தன்னைச் சந்திக்கவந்த காரணம் என்ன என்று ஹம்ஃப்ரி அவர்கள் கேட்டபோது, அருள்பணி நூவென் அவர்கள், "பரிவு என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள உங்களைத் தேடி வந்துள்ளேன்" என்று கூறினார். இதைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிது ஆச்சரியம் அடைந்தார். விரைவில் சமாளித்துக் கொண்டு, தன் மேசையின் மீதிருந்த ஒரு 'பென்சிலை'க் கையில் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்:

"இந்தப் பென்சிலின் முழு நீளமும், 'போட்டி' என்ற கருத்திற்கு ஓர் அடையாளம். பென்சிலின் அடியில் இணைக்கப்பட்டுள்ள 'இரப்பர்' பரிவுக்கு அடையாளம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் நம்மில் பலர், வாழ்நாளின் பெரும்பகுதியை 'போட்டி'க்கெனப் பயன்படுத்துகிறோம். இதனால், நாம் பல கிறுக்கல்களை உருவாக்குகிறோம். குழப்பங்கள் பெருகிவிடும்போது, 'பரிவு' என்ற 'இரப்பரைக்' கொண்டு, நாம் உருவாக்கிய கிறுக்கல்களை அழித்துத் திருத்த முயல்கிறோம்" என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹுபர்ட் ஹம்ஃப்ரி அவர்கள் பதில் அளித்தார்.

'பரிவு' அல்லது, 'இரக்கம்' என்ற 'இரப்பர்', பல தாறுமாறான கிறுக்கல்களைத் திருத்தி அமைக்க உதவும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.