2016-04-11 16:00:00

திருத்தந்தையின் ஏப்.10,11 டுவிட்டர் செய்திகள்


ஏப்.11,2016. "மணமுறிவு பெற்று, மீண்டும் புதிதாகத் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளவர்கள், தாங்கள் திருஅவையின் அங்கம் என்று உணர்வதற்கு வழிசெய்யப்பட வேண்டும், இவர்கள் திருஅவைக்குப் புறம்பானவர்கள் அல்ல(243); பிரமாணிக்கம், பொறுமையைச் சார்ந்தது, அதன் தியாகங்களும், பலன்களும், ஆண்டுகள் செல்லச் செல்லக் கனிகளைத் தரும்(231); மன்னிப்பது எப்படி என்பதும், மன்னிக்கப்பட்டதாக உணர்வதும், குடும்ப வாழ்வில், அடிப்படை அனுபவமாகும் (236);” போன்றவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இத்திங்களன்று  வெளியிடப்பட்டன.

 “இயேசுவின் கனிவைப் பின்பற்றுவதற்கு, நம் குடும்பங்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்(100); அன்பு, நம் கண்களைத் திறந்து, மனிதரின் மாபெரும் மதிப்பைப் பார்க்கச் செய்கின்றன(128); ஒவ்வொரு புதிய வாழ்வும், அன்பின் இலவசக் கூறைப் பாராட்டுவதற்கு நம்மை அனுமதிக்கின்றது(166); ஒரு குழந்தை, தான் விரும்பப்படுகிறேன் என்பதை உணர்வது முக்கியம், அக்குழந்தை, சில தனிப்பட்ட தேவைக்கான தீர்வு அல்ல(170); திறந்த மனம் கொண்ட குடும்பங்கள், ஏழைகளுக்கு ஓர் இடத்தைக் காண்கின்றன(183)" என்பவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளாக இஞ்ஞாயிறன்று வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒன்பது மொழிகளில், @Pontifex  என்ற முகவரியில், வெளியிடப்பட்டுவரும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஏப்ரல் 8, கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட, “அன்பின் மகிழ்வு”திருத்தூது அறிவுரை மடலை மையப்படுத்தி, இத்திங்கள் மற்றும் இஞ்ஞாயிறு டுவிட்டர் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தங்களுக்குத் திருத்தந்தைக்கு உதவுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஜி 9 கர்தினால்கள் அவையின் 14வது கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கியுள்ளது. இக்கூட்டம், வருகிற புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.