2016-04-07 10:00:00

நேர்காணல் – இந்திய இசையின் சிறப்பு - அ.சகோ. மார்கிரேட்


ஏப்.07,2016. அருள்சகோதரி முனைவர் மார்கிரேட் அவர்கள், புனித வளனார் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தவர். திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் 13 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றி, கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றிருக்கும் இவர், இந்திய இசையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். தென்னிந்தியாவில் இந்திய இசையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அருள்சகோதரி மார்கிரேட் அவர்களின் இசைப்பயணம் பற்றிக் கடந்த வாரம் கேட்டோம். இன்று, இந்திய இசையின் சிறப்பு பற்றி விளக்குகிறார். இவர், இன்னிசைச் சிலம்பு, இன்னிசை யாழ் உட்பட, இசை சார்ந்த சில நூல்களையும் வெளியிட்டிருக்கிறார் .   








All the contents on this site are copyrighted ©.