2016-04-07 09:55:00

இது இரக்கத்தின் காலம் : எளியமனம் பிறர் மகிழ்வில் கவனம்


யமோரா தெஸ்ஸோ (Yamora Tessho) என்ற ஜென் குரு, அந்த நாட்டு அரசருக்கும் ஆசிரியராக இருந்தார். அவருடைய வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருக்கும். அவர் எப்பொழுதும் வறுமை நிலையிலேயே இருந்தார். அவரிடம் ஓர் ஆடைக்கு மாற்று ஆடைகூட இல்லை. அந்த அளவுக்கு அவரது வாழ்வு எளிமையாக இருந்தது. இந்த ஜென் குருவின் வறுமை நிலையைக் கண்ட அரசர், அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, புதிய ஆடைகளை வாங்கிக் கொள்ளும்படிக் கூறினார். ஆனால், அடுத்த முறை, யமோரா அவர்கள் அரசரிடம் சென்றபோது, தனது பழைய ஆடையையே உடுத்தியிருந்தார். இதைப் பார்த்த அரசர், குருவே, புதிய ஆடை என்னவாயிற்று?” என்று கேட்டார். அதற்கு யமோரா அவர்கள், “அரசே, உங்கள் குழந்தைகளுக்கு நான் புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்துவிட்டேன்” என்றார்.

அன்பர்களே, ஓர் எளிய மனம் பிறர் மகிழ்விலேதான் குறியாக இருக்கும். அது ஒருபோதும் தன்னைப் பற்றிச் சிந்திக்காது. இது இரக்கத்தின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.