2016-04-06 15:03:00

உரோம் நகரின் நான்கு பசிலிக்கா பேராலயங்களின் 3D திரைப்படம்


ஏப்ரல்,06,2016. "இந்த யூபிலி ஆண்டின் ஒவ்வொரு நொடிப்பொழுதும், புனிதத்தில் வளர நமக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 6, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

மேலும், உரோம் நகரின் நான்கு பசிலிக்கா பேராலயங்களை 3D எனப்படும் முப்பரிமாண முறையில் திரையில் காணும் வாய்ப்பு, ஏப்ரல் 11ம் தேதி முதல் 13ம் தேதி முடிய, திரையரங்குகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பேதுரு, புனித ஜான் இலாத்தரன், புனித மேரி மேஜர், புனித பவுல் ஆகிய நான்கு பசிலிக்கா பேராலயங்களை பல கோணங்களில் காட்டும் 90 நிமிட திரைப்படம், வத்திக்கான் தொலைக்காட்சி நிலையமும், SKY தொலைகாட்சி நிறுவனமும் இணைந்து வெளியிடும் முயற்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பசிலிக்கா பேராலயங்களையும் மக்கள் பலமுறை பார்த்திருந்தாலும், இதுவரைக் காணாதக் கோணங்களில் இந்த ஆலயங்கள் திரைகளில் காட்டப்படும்போது, புதுவகை அனுபவம் பெறுவர் என்று, வத்திக்கான் அருங்காட்சியக இயக்குனர், Antonio Paolucci அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலி, மெக்சிகோ, கனடா, கொலம்பியா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட 50 நாடுகளில் இந்தத் திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.