2016-04-05 15:50:00

உலகளாவிய தோழமையின் புதிய யுகத்திற்கு ஐ.நா. அழைப்பு


ஏப்ரல்,05,2016. உலகில் முதன் முறையாக நடைபெறவிருக்கும் மனிதாபிமான உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவரும் நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள், புதியதோர் உலகை அமைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் வருகை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில், வருகிற மே 23, 24 தேதிகளில் நடைபெறவிருக்கும் முதல் உலக மனிதாபிமான உச்சி மாநாடு பற்றிப் பேசிய பான் கி மூன் அவர்கள், இதில் கலந்துகொள்பவர்கள் எத்தகைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கியுள்ளார்.

மனித சமுதாயம் அழிந்துகொண்டிருக்கும் இன்றைய உலகத்தின் நிலையைத் தொடர்ந்து ஏற்க முடியாது என்ற உறுதியான செய்தியுடன், இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும், இந்த நல்ல தருணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வரலாறே தீர்ப்புச் சொல்லும் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

அரசியல் தலைவர்கள், சண்டைகளைத் தடுத்து அவற்றுக்கு முடிவு காண வேண்டும்,    மனித சமுதாயத்தைப் பாதுகாக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மனித சமுதாயத்தில் முதலீடு செய்ய வேண்டும், தேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களைப் பறக்கணிக்கக் கூடாது போன்ற நோக்கங்களுடன் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. 

ஆதாரம் : UN/  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.