2016-04-01 16:33:00

லாகூர் பயங்கரவாதப் படுகொலை இஸ்லாமுக்கு எதிரானது


ஏப்.01,2016. பாகிஸ்தானின் லாகூரில், அப்பாவி குடிமக்கள் மீது பாகுபாடின்றி நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல், இஸ்லாமியப் போதனைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து மனித சமுதாயத்திற்கும் எதிரான தாக்குதல் என்று, சிங்கப்பூர் முஸ்லிம் தலைவர், அந்நாட்டுக் கத்தோலிக்கப் பேராயரிடம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள, சிங்கப்பூர் முஸ்லிம் தலைவர் Mohamed Fatris Bakaram அவர்கள், உயிர்ப்பு ஞாயிறன்று லாகூரில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதக் குற்றத்திற்கு எதிரான, தனது கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும், தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு, இத்தகைய பயங்கரமான கொடும் செயல்கள், மனிதமற்றப் பண்பாகும் என்பதை நாம் ஒன்றிணைந்து தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கூறியுள்ளார் சிங்கப்பூர் முஸ்லிம் தலைவர் Bakaram.

ஒருவர், வேறொரு மத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்பதற்காக, அம்மனிதரைத் தாக்குவது நியாயப்படுத்தப்பட முடியாதது என்றும், இது, பரிவன்பு மற்றும் அமைதியான நல்லிணக்க வாழ்வு விழுமியங்களில் நம்பிக்கை வைக்கும் மனிதருக்கு எதிரானது என்றும், முஸ்லிம் தலைவர் Bakaram அவர்களின் கடிதம் கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.