2016-03-30 15:45:00

ஈக்குவதோர்:வாழ்வுக்கு ஆதரவாக 25,000 மக்கள் பேரணி


மார்ச்,30,2016. “செயல்பாடுகளில் விளங்கும் அன்பு” என்ற தலைப்பில் ஈக்குவதோர் நாட்டில் 25,000க்கு மேற்பட்ட மக்கள், மனித வாழ்வுக்கும், குடும்ப அமைப்புக்கும் ஆதரவாக, பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுக்கு ஆதரவாக, ஈக்குவதோர் நாட்டின் பல நகரங்களில், ஒன்பதாவது ஆண்டாக, இப்புதனன்று நடைபெற்ற பேரணிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஈக்குவதோர் ஆயர் பேரவையின் வாழ்வு மற்றும் குடும்ப ஆணைக்குழுத் தலைவர் Quito துணை ஆயர் Danilo Echeverría அவர்கள், பல்வேறு பொதுநிலை கத்தோலிக்க இயக்கங்கள், பெண்கள் குழுக்கள், பங்குத்தள இளையோர் அமைப்புகள், பன்னாட்டுக் குடும்பக் கழகங்கள், மனித மற்றும் குடும்ப வாழ்வுக்கு ஆதரவு இயக்கங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து இப்பேரணியை நடத்தியுள்ளார்.

ஆதாரம் : CNA  /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.