2016-03-29 15:29:00

எருசலேம் உயிர்ப்பு கொண்டாட்டங்களில் காசா கிறிஸ்தவர்கள்


மார்ச்,29,2016. எருசலேமில், கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, எட்டாண்டுகளில் முதன்முறையாக காசா பகுதியின் பெருவாரியான கிறிஸ்தவர்களுக்கு அனுமதியை வழங்கியுள்ளது இஸ்ரேல் அரசு.

எருசலேமில் மத வழிபாடுகளில் கலந்துகொள்ளும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அதிலும் குறிப்பாக 35 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு அனுமதியை மறுத்து வரும் இஸ்ராயேல் அரசு, இந்த ஆண்டில் விண்ணப்பித்தவர்களுள் 95 விழுக்காட்டினருக்கு அனுமதியை வழங்கியுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி தங்கள் விண்ணப்பத்தை இஸ்ரேல் இராணுவத்திடம் சமர்ப்பித்த 890 பேருள், 847 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார், காசா பகுதி பங்குதந்தை அருள்பணி மாரியோ தே சில்வா.

காசா பகுதி கிறிஸ்தவர்களுக்கு 45 நாள் அனுமதியை வழங்கி, இஸ்ரேல் பகுதியில் நுழைய வழி வகுத்துள்ளதால், கிறிஸ்து உயிர்ப்புக் கொண்டாட்டங்களில் காசா கிறிஸ்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர் என்றார் அருள்பணி தெ சில்வா. 

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.