2016-03-25 12:48:00

இது இரக்கத்தின் காலம்... தன்னை உணர்ந்தவனே ஞானி


ஜப்பானிய செல்வந்தர் ஒருவரின் விழாவுக்கு, ஜென் ஞானி காசன் அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன் இப்படியொரு ஆடம்பர விழாவில் அவர் கலந்துகொண்டதில்லை. எனவே, அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. வியர்த்து கொட்டியது.

இந்நிகழ்ச்சிக்குப் பின் காசன் தன் மாணவர்களை அழைத்தார். ""என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுக்கு ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவன். உலகத்தில் ஏற்படும் பிரபலத்தை சமமாகப் பாவிக்க முடியாத மனநிலையில் தற்போது இருக்கிறேன். நீங்கள் வேறு ஆசிரியரிடம் சென்று பயிலுங்கள்'' என்று கூறி விடைபெற்றார். பின்னர், ஒரு கோயிலில் சென்று தனிமையில் தியானம் செய்தார். வேறு ஓர் ஆசிரியரிடம் மாணவராகச் சேர்ந்து பயின்றார். எட்டு ஆண்டுகளுக்குப் பின், காசன் ஞானம் அடைந்தவராக புதிய மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.