2016-03-23 14:47:00

இது இரக்கத்தின் காலம்... – உண்மையான புதுமை என்பது எது?


ஜென் துறவி ஒருவர், ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது, அன்பைப் போதிக்கும் புத்தரின் பெயரைச் சொல்லி நிர்வாண நிலையை அடையலாம் என்று நம்பி வந்த போதகர் ஒருவர், துறவியின் பேச்சைக் கேட்கத் திரளாக மக்கள் வந்து கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார். அவரிடம் வாதம் செய்ய விரும்பி, பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் உரையை நிகழ்த்த முடியாமல் தடை ஏற்பட்டது. துறவி தனது பேச்சை நிறுத்தி, என்ன சத்தம் என்று கேட்டார்.

அந்தப் போதகர், "எங்கள் பிரிவை நிறுவியவர் ஒரு கரையிலும் அவரது சீடர் எதிர்க் கரையிலும் நின்றபோது அவர் ஓர் அற்புதம் புரிந்தார். கையில் ஒரு தூரிகையை என் குரு இந்தக் கரையில் வைத்திருக்க, சீடர் எதிர்க்கரையில் காகிதத்தை வைத்திருக்க, எனது குருவோ, கடவுளின் பெயரை வானத்தின் வழியே எழுதி அனுப்பினார். உங்களால் அப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்த முடியுமா?" என்று கேட்டார்.

ஜென் துறவி பதில் கூறினார், ‘ஒருவேளை உனது குரு அப்படிப்பட்ட வித்தையைச் செய்து காட்டி இருக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் ஜென் இல்லை! நான் நிகழ்த்தும் அற்புதம் என்னவென்றால், எனக்குப் பசி ஏற்படும்போது நான் சாப்பிடுவேன். எனக்குத் தாகம் எடுக்கும்போது நான் தண்ணீரைக் குடிப்பேன்! அவ்வளவுதான்’ என்று. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.