2016-03-19 17:12:00

பாலியல் தொழிலிருந்து பெண்களை விடுவித்த காரித்தாஸ்


மார்ச்,19,2016. இஸ்பெயின் நாட்டில்பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த 2200க்கும் மேற்பட்ட பெண்களை மீட்டு, அவர்களுக்குப் புது வாழ்வை வழங்கி வருவதாக அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

மக்கள் வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடிவரும் கத்தோலிக்க காரித்தாஸ், அண்மையில் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், இஸ்பெயினில் தற்போது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் வழியே புதுவாழ்வைப் பெற்றுள்ள இப்பெண்களுள், 20 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே இஸ்பானிய நாட்டினர் எனவும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு புதுவாழ்வை அமைத்துத் தரும் நோக்கில், கடந்த 30 ஆண்டுகளாக உழைத்துவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், மக்களை வியாபாரப் பொருளாக கடத்துதல் போன்றவைகளுக்கு எதிராகவும் தன் குரலை தொடர்ந்து உயர்த்தி வருகின்றது.

ஆதாரம்: CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.