2016-03-16 17:10:00

மியான்மார் நாட்டில் அரசுத் துணைத் தலைவராக கிறிஸ்தவர்


மார்ச்,16,2016. மியான்மார் நாட்டில் அரசுத் துணைத் தலைவராக, ஹென்றி வான் தியோ (Henry Van Thio) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது என்று, மியான்மார் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான, அருள்பணி பால் ஆங் டாங் (Paul Awng Dang) அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

மியான்மார் பாராளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்தத் தேர்தலில், ஆங் சான் சூ சி (Aung San Suu Kyi) அவர்களின் கட்சியைச் சேர்ந்த, Htin Kyaw அவர்கள் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குப் பின்னர், அந்நாட்டின் குடிமகன் ஒருவர் அரசுத் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதை, உலக ஊடகங்கள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளன.

அரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவரில், ஹென்றி வான் தியோ அவர்கள், அந்நாட்டில் மிகவும் பின்தங்கிய, வறுமையான மற்றும் சிறுபான்மையான கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர் என்பது, குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.