2016-03-12 16:48:00

வியட்நாம் திரு அவையின் கல்வி பணி அக்கறை


மார்ச்,12,2016 இளைய தலைமுறையினர், நாட்டிற்கும் திருஅவைக்கும் பயனுடையவர்களாக மாறும் நோக்கில், அவர்களுக்கு கல்வி வழங்குவது, தலத்திருஅவையின் முக்கிய மேய்ப்புப்பணி அக்கறையாக உள்ளது என, வியட்நாம் திருஅவை அறிவித்துள்ளது.

இளையோருக்கு கல்வி வழங்கி அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவதில் வியட்நாம் தலத்திருஅவை கவனம் செலுத்த விழைகிறது என உரைத்த அந்நாட்டு ஆயர் பேரவையின் கல்வி அவையின் பொதுச்செயலர் அருள்பணி Vincent Nguyen, அவர்கள், வியட்நாமின் கல்வி அமைப்புமுறை, அந்நாட்டின் கலாச்சார மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

வியட்நாமில், கிராமப்புறங்களில் வாழும் இளையோருள் 50 விழுக்காடினர், உயர் கல்விக்குச் செல்வதில்லை, மற்றும் 4 விழுக்காடினரே பல்கலைக்கழக பட்டப் படிப்பை முடிக்கின்றனர் என்ற நிலையில், இத்தகையோருக்கு இலவசக் கல்வியையும், இலவச தங்கும் வசதிகளையும் வழங்கி உதவி வருகின்றது, தலத்திருஅவை. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.