2016-03-12 16:35:00

தெற்கு சூடானில் நடப்பவை 'போர்க்குற்றங்களாக' அமையலாம்: ஐநா


மார்ச்,12,2016 தெற்கு சூடானில் இடம்பெறும் வன்முறைகள், போர்க் குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடும் என்று ஐநாவின் மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பொதுமக்களை இலக்கு வைத்து கொல்வது, மற்றும் பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக பயன்படுத்துவது உள்ளிட்ட, மிகவும் கொடூரமான போர்க் கொள்கையை தெற்கு சூடானிய அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக, ஐநாவின் அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டுகின்றது.

தெற்கு சூடானில், கடந்த 2013ம் ஆண்டு உள்நாட்டுப் போர் துவங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் அரசு படைகள், அறுபதுக்கும் அதிகமான ஆண்களையும் சிறுவர்களையும் கப்பல் கொள்கலன் ஒன்றில் அடைத்து, மூச்சுத் திணறடிக்கச் செய்து கொன்றுவிட்டதாக, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.