2016-03-11 15:29:00

இது இரக்கத்தின் காலம் : ஒவ்வொரு மனிதரும் விவேகமுள்ள புனிதரே


அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் புனிதரின் பெயர் பரவியிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற செய்தியும், கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்தில் வாழ்ந்த கிராமத்து மனிதர் ஒருவர், அவரைச் சந்தித்துவிட வேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைக்காரர் வரவேற்றார். ’நான் அந்த மகானைப் பார்க்க வேண்டும்’என்று வேலைக்காரரிடம் சொன்னார் வந்தவர். குடிசைக்குள் அவருக்கு உணவு வழங்கப்பட்டு, நன்றாக கவனிக்கப்பட்டார். அப்போதும் புனிதரைப் பார்க்க முடியவில்லை. நேரம் ஆக ஆக, பொறுமையிழந்த கிராமவாசி, ‘நான் எப்போதுதான் புனிதரைப் பார்க்க முடியும்’ என்று கேட்டார். ’நீங்கள் பார்க்க வந்தவரை,  ஏற்கனவே பார்த்து விட்டீர்கள். மேலும், நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால், உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமாகத் தீர்த்துவிடலாம்’ என்றார், வேலைக்காரராகப் பணியாற்றிய புனிதர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.