2016-03-10 16:51:00

ஜப்பான்: இரண்டு அணு உலைகளை மூட உத்தரவு


மார்ச்,10,2016. பாதுகாப்பு தொடர்பான அச்சங்களின் காரணமாக, ஜப்பானில் உள்ள இரண்டு அணு உலைகளை மூடும்படி அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

டகஹமா (Takahama) அணு உலையைத் திறக்கக்கூடாது என உள்ளூர் மக்கள் கோரிவந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த அணு உலை இவ்வாண்டு, சனவரி மாதம்தான் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.

நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகவும் ஆயினும், இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் டகஹமா அணு உலையை இயக்கும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2011ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம், சுனாமி இவற்றைத் தொடர்ந்து,  ஃபுகுஷிமா (Fukushima) அணு உலையில் நிகழ்ந்த விபத்தின் ஐந்தாவது நினைவு தினம் நெருங்கும் நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

20,000 த்திற்கும் அதிகமானோர் பலியான இந்த இயற்கைப் பேரழிவுக்குப்பின்,

ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்தையடுத்தே, ஜப்பானில் உள்ள அணுஉலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.