2016-03-10 16:59:00

ஏமனில் இஸ்லாமிய மரபு ஆடை அணியாதவருக்கு எச்சரிக்கை


மார்ச்,10,2016. மார்ச் 8, இச்செவ்வாயன்று, உலக மகளிர் நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில்,  ஏடன் நகரில் இயங்கிவரும் ஒரு பெண்கள் பள்ளியில், இஸ்லாமியத் தீவிரவாதிகள் நுழைந்து, அங்கு இஸ்லாமிய மரபுப்படி ஆடை அணியாத மாணவியருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததாக பிதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

ஏடன் நகரின் அனைத்து பெண்களும் இஸ்லாமிய மரபுப்படி ஆடை அணியவேண்டும் என்ற எச்சரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்கள், மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் நகரெங்கும் தரப்பட்டன என்று கூறப்படுகிறது.

மேலும், இஸ்லாமியர் அல்லாத யூத மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வேறு வகையில் ஆடை அணிந்தால், அவர்கள் உடனே கொல்லப்படுவர் என்றும் இந்த துண்டு பிரசுரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வெள்ளியன்று ஏடன் நகரில் அருளாளர் அன்னை தெரேசா சகோதரிகள் பணியாற்றிவந்த முதியோர் இல்லத்தில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அந்த இல்லத்தை, அரசு சார்ந்த தன்னார்வத் தொண்டர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.