2016-03-09 16:12:00

வத்திக்கானில், உலக மகளிர் நாள் கருத்தரங்கு


மார்ச்,09,2016. மார்ச் 8, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் நாளையொட்டி, வத்திக்கானில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

Chantal Gotz என்ற பெண்மணி உருவாக்கிய Fidel Gotz அறக்கட்டளையும், இயேசு சபையினரின் JRS எனப்படும் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவும் இணைந்து, 'நம்பிக்கையின் குரல்கள்' (Voices of Faith) என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கு, வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பிறை அறிவியல் கழக வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த பெண்கள் தங்கள் வாழ்வில் நடந்த நம்பிக்கை தரும் நிகழ்வுகளை இக்கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டனர்.

நம்பிக்கை தரும் இத்தகையக் கதைகள், இன்னும் நீதி நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வழி வகுக்கும் என்று தான் நம்புவதாக, கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தகையக் கருத்தரங்கை நடத்தி வரும் Chantal Gotz அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பன்னாட்டுப் பெண்கள் இவ்விதம் இணைந்து வருவது, திருஅவையில் பெண்கள் முன்னிலை வகிப்பதற்கு ஒரு வழியாக இருக்கும் என்று JRS அமைப்பின் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் Tom Smolich அவர்கள், கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.