2016-03-05 16:01:00

இலங்கை கத்தோலிக்கர் புனித வெள்ளி விடுமுறைக்கு முயற்சி


மார்ச்,05,2016. புனித வெள்ளி திருவழிபாடுகளில் கத்தோலிக்கர் கலந்து கொள்வதற்கு வழியமைக்கும் விதத்தில், அந்நாளில் தங்களுக்கு வேலையிலிருந்து விடுமுறை வழங்கப்படுமாறு இலங்கை கத்தோலிக்கர், அந்நாட்டு அரசுத்தலைவரை வலியுறுத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் கிறிஸ்தவத் தொழிலாளர்கள் புனித வெள்ளியின் முக்கியத்துவத்தில் முழுமையாகப் பங்கு கொள்வதற்கு உதவியாக, புனித வெள்ளி, வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென்று அரசுத்தலைவரை வலியுறுத்தி வருகின்றனர் இலங்கை கத்தோலிக்கர்.

இதற்காக, விண்ணப்ப மனுவில் கையெழுத்து வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இலங்கையில் மூன்று விதமான பொது விடுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று, வங்கிகளுக்கும் மட்டும் உரியது. இரண்டாவது, வங்கிகள் மற்றும் அரசுக்குரியது. மூன்றாவது வர்த்தக விடுமுறை. இது அரசு மற்றும் தனியார்  நிறுவனங்களுக்கு உரியது. தற்போதைய புனித வெள்ளி விடுமுறை, வங்கிகள் மற்றும் அரசுக்குரியது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.