2016-03-04 16:31:00

கண் தானம் செய்வதற்கு அருள்சகோதரிகள் உறுதி


மார்ச்,04,2016. இந்தியாவில் பல்வேறு துறவு சபைகளைச் சார்ந்த அறுபது அருள்சகோதரிகள் கண் தானம் செய்வதற்கு உறுதி அளித்துள்ளனர்.

இந்தியாவில் பார்வையிழந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில், கிளேரிஷியன் துறவு சபையினர் நடத்தும், பார்வையிழந்தவர்க்கு உதவும் இயக்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக, அருள்சகோதரிகளும் கண் தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

இச்சகோதரிகள் தங்கள் சபைகளிலும், கண் தானத்தின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்வார்கள் என்று, இந்த இயக்கத்தை நடத்தும் அருள்பணி George Kannanthanam அவர்கள் கூறினார்.

உலகிலுள்ள 3 கோடியே 90 இலட்சம் பார்வையிழந்த மக்களில், ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏறக்குறைய ஒரு கோடியே நாற்பது இலட்சம் விழிவெண்படலம் அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. ஆனால், ஏறக்குறைய நாற்பதாயிரம் விழிவெண்படலங்களே தானமாகக் கிடைக்கின்றன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.