2016-03-04 16:37:00

இது இரக்கத்தின் காலம்.. : இதயங்கள் வழியாக பேசிப் பழகுவோம்


கதவைத் திறக்க சாவியைத் தேடியபோதுதான் அவருக்கு தெரிந்தது, சாவி எங்கோ தொலைந்து விட்டது என்று. பக்கத்து வீட்டில் சுத்தியல் வாங்கி, கதவில் தொங்கிய பூட்டின் தலையில் அடித்து, சிரமப்பட்டுத் திறந்தார்.

வீட்டிற்குள் சென்றதும், முதல் வேலையாக, மாற்றுச் சாவியை எடுத்து பூட்டின் அருகில் வைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த‌ சுத்தியல், அந்தச் சாவியை நோக்கி, 'உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். நீ  மட்டும் சீக்கிரம் திறந்துவிடுகிறாயே அதெப்படி?' என்று கேட்டது.

அதற்கு சாவி சொன்னது, 'நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பூட்டைத் திறக்க, நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால், நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்று.

இரக்கத்தின் ஆண்டில், இதயங்கள் வழியாக பேசிப் பழகுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.