2016-03-01 15:04:00

பேராயர் காலகர்-பிரிட்டனுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம்


மார்ச்,01,2016. பன்னாட்டுத் தளத்தில் திருப்பீடத்தின் பங்கு பற்றி எடுத்துரைக்கும் நோக்கத்தில், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் பிரிட்டனுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இச்செவ்வாய் முதல் வருகிற வியாழன் வரை பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பேராயர் காலகர் அவர்கள், பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பன்னாட்டு உறவுகள் துறை, காலநிலை மாற்றம் குறித்த துறை ஆகியவற்றின் அதிகாரிகளைச் சந்திப்பார்.

மேலும், ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களையும், பிரிட்டன் கத்தோலிக்கத் தலைவர்களையும் சந்திப்பார் பேராயர் காலகர்.

திருப்பீடத்திற்கும், பிரிட்டனுக்கும் இடையே ஏற்கனவே நல்லுறவுகள் நிலவுகின்றன என்றுரைத்த பேராயர் காலகர் அவர்கள், நடைமுறையில் இல்லாமல், கோட்பாட்டளவில் பிரிட்டன் அரசு புரிந்துகொள்ளும் சில கூறுகள் பற்றி எடுத்துரைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.