2016-02-29 16:11:00

உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்


பிப்.29,2016. உலகின் பால் உற்பத்தியில் இந்தியா 18.5 விழுக்காடு உற்பத்தி செய்கிறது என்றும், இதன்மூலம் பால் உற்பத்தியில், இந்தியா உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்றும், கடந்த வார இறுதியில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியப் பொருளாதாரம் நிலையானதாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வருவதாகவும், இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் பொருளாதாரம் நிலைகுலைந்திருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக நிலையாக உயர்ந்துள்ளது என்றும், கடந்த 2014-15 நிதி ஆண்டில் 7.6 விழுக்காட்டுப் பொருளாதார வளர்ச்சி இருந்தது என்றும், 2015-16ல் இது 9.2 விழுக்காடாக உயரும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.