2016-02-26 14:49:00

இது இரக்கத்தின் காலம்..: கறை படிந்த கரங்களால் எதைத் துடைக்க?


வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று, அந்த தேநீர் கடை முன்பு, சாலையில் உடைத்திருந்த பூசணிக்காயால் வழுக்கி சரிந்தது. நல்ல வேளை! ஓட்டி வந்தவர்கள் தலைக் கவசம் அணிந்திருந்ததால், இலேசான சிராய்ப்புடன் தப்பினர். தேநீர் கடையில் நின்று வாழைப்பழம் உரித்து தின்று கொண்டிருந்த காவலர், தேநீர் கடைக்காரரை பார்த்து, ‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்காய்யா உனக்கு! நடுரோட்டுல பூசணிக்காய் உடைச்சு வைச்சிருக்க! நல்ல வேளை சின்ன காயத்தோட போச்சு! ஒரு ஒழுங்கு வேணும்யா! உன் திருஷ்டி கழியறதுக்கு ஊரான் எவனோ அடிபடணுமா?’ என கோபமாகக் கத்தியபடி, தன் கையில் வைத்திருந்த வாழைப்பழத் தோலை, அப்படியே சாலையில் விட்டெறிந்தார்.

அவரவர் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இந்த இரக்கத்தின் காலத்தில் உலகுக்கு உதவும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.