2016-02-23 15:18:00

இலங்கையர் பெற்றுள்ள மாபெரும் கொடை லூர்து அன்னை மரியா


பிப்.23,2016. இலங்கையில் எவ்வித வேறுபாடின்றி, மக்கள் பெற்றுள்ள மாபெரும் கொடை லூர்து அன்னைமரியா என்று, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

லங்கா அன்னைமரியாவாக, இலங்கையைப் பாதுகாத்துவரும் லூர்து அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயத்தின் நூற்றாண்டு விழாத் திருப்பலியில் இவ்வாறு உரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், மரியாவின் பரிந்துரை வழியாகவே இயேசுவை நாம் பெற்றோம் என்று கூறினார்.

1948ம் ஆண்டு முதல் லூர்து அன்னைமரியா இலங்கையைப் பாதுகாத்து வருகிறார் என்றும், தனது குழந்தை எப்படியிருந்தாலும், எத்தகைய வாழ்வை வாழ்ந்தாலும் எந்தத் தாயும், அக்குழந்தையைக் கைவிடமாட்டார் என்றும் கூறினார் கர்தினால் இரஞ்சித்.

நாம் பாவத்தால் அவ்வன்னையைவிட்டுத் தூரமாக விலகி இருந்தாலும், நாம் மனம் மாறித் தம்மிடம் வர வேண்டும் என்று, நமக்காக இந்த விண்ணகத் தாய் எப்போதும் காத்திருக்கிறார் என்றும் கூறினார் கர்தினால் இரஞ்சித்.

ஏறக்குறைய மூவாயிரம் விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலிக்கு முன்னர், அமைதியின் அடையாளமாக புறாக்களைப் பறக்கவிட்டார் கர்தினால் இரஞ்சித். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.