2016-02-22 15:16:00

அரசுத்தலைவர் ஒபாமாவின் கியூபப் பயணம் வளர்ச்சிக்கு உதவும்


பிப்.22,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் கியூபாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருப்பது, கியூபாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்று, கியூபக் கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அவர்கள் கூறினார்.

அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள், வருகிற மார்ச் 21, 22 தேதிகளில் கியூபாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருப்பது குறித்து Reuters செய்தி நிறுவனத்திடம் பேசிய, ஹவானா பேராயர் கர்தினால் ஒர்த்தேகா அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.    

அரசுத்தலைவர் ஒபாமா அவர்களின் கியூபப் பயணம், கியூபாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கர்தினால் ஒர்த்தேகா அவர்கள் கூறினார்.

அரசுத்தலைவர் ஒபாமா அவர்களின் இப்பயணம், 1928ம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒருவர், கியூபாவுக்குச் செல்லும் முதல் பயணமாக அமையும்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.