2016-02-20 14:57:00

இந்தோனேசியா-LGBT விளம்பரத்திற்கு சமயத் தலைவர்கள் எதிர்ப்பு


பிப்.20,2016. இந்தோனேசியாவில், LGBT வாழ்க்கை முறையை சட்டத்தின்படி  அங்கீகரிப்பதற்கு ஆதரவாக இடம்பெறும் எல்லா விதமான விளம்பரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.

LGBT அல்லது GLBT என்று அழைக்கப்படும் ஓரினப் பாலினச் சேர்க்கை மற்றும் மூன்றாவது பாலினத் திருமண நடைமுறைகள், சமயப் போதனைகளையும், நாட்டின் அரசமைப்புக் கோட்பாடுகளையும் மீறுகின்ற சமூகத் தீமைகள் என்று கூறியுள்ளனர் இந்தோனேசிய பல்சமயத் தலைவர்கள்.

இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர் பேரவை(KWI), உலேமா இஸ்லாமிய அவை(MUI), புத்தமதச் சமூகங்கள் அவை(Walubi), கன்ஃபூசிய உயர் அவை(Matakin) ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஓரினப் பாலினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு, தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

அதேநேரம், ஓரினப் பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்குத் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியப் பல்சமயத் தலைவர்கள்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.