2016-02-12 16:11:00

இது இரக்கத்தின் காலம்.. : பணத்தால் பயமும் பிறக்கிறது


அந்த பணக்கார முதியவர் திடீரென தன் வழக்குரைஞரை அழைத்து, தன் சொத்தில் ஒரு சிறு வீட்டை மட்டும் விட்டுவிட்டு மீதியை எல்லாம் தன் நான்கு மகன்களுக்கும் சரி சமமாக பங்கிட்டுக் கொடுக்கச் சொன்னார். வழக்குரைஞருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர், 'ஐயா. இன்னும் நீங்கள் வாழவேண்டிய காலம் நிறைய இருக்கிறது. உங்கள் பிள்ளைகளோ திருமணம் முடிந்து தனியாக சந்தோசமாகத்தானே வாழ்கிறார்கள். சொத்துப் பிரிக்க இப்போது என்ன அவசரம்? இப்போதே கொடுத்துவிட்டால், பிறகு உங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்' என்று சொன்னார். உடனே அந்த பணக்கார முதியவர், 'நீங்கள் கூறுவதுபோல், நானும் இன்னும் நீண்ட காலம் வாழத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால், இந்தக் கிழவன் எப்போது சாவான், நமக்கு எப்போது சொத்து கிடைக்கும் என என் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் என் சாவுக்காகக் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. சொத்தைப் பிரித்துவிட்டால், அவர்களும் என் சாவுக்காக காத்திருக்க மாட்டார்கள், நானும் என் சிறிய வீட்டில் பயமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்திருப்பேன்' என்றார். 

உண்மைதான். தேவைக்கு மீறியச் சொத்து என்பது, தைரியத்தைவிட, பயத்தையே மனதில் விதைக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.